ADDED : ஆக 14, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சொத்துவரி, பெயர் மாற்றம், வரி திருத்தம், காலிமனை வரி விதிப்பு உட்பட 83 மனுக்கள் வரப்பெற்றன. வீட்டு கதவு எண் மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடன் மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது.
கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் கோபு, சி.டி.பி.ஓ., மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சிவகுமார் பங்கேற்றனர்.

