ADDED : ஆக 06, 2024 05:18 AM
பாலமேடு: அலங்காநல்லுார் வட்டார வேளாண் துறை சார்பில் ராஜக்காள்பட்டியில் நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
உதவி இயக்குனர் மயில், மானாவரியில் நிலக்கடலை சாகுபடியில் இயந்திரங்களின் பங்கு, மத்திய, மாநில அரசு திட்டங்கள், பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம், தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுதல், விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் பற்றி பேசினார். துணை வேளாண் அலுவலர் பாலாமணி, 'இயற்கை வேளாண்மை முறைகள், மானிய திட்டங்கள், இயற்கை திரவ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ரைசோபியம் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
ஓய்வுபெற்ற துணை வேளாண் அலுவலர் ராமன், காரீப் பருவத்தில் இயந்திர முறையில் சான்றுபெற்ற நிலக்கடலை விதைப்பு கருவி முறைகள், கடலை நுண்ணுாட்டம், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை குறித்து விளக்கினார். தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், உதவி மேலாளர்கள் சவுந்தரராஜன், வசந்தி பங்கேற்றனர்.