நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : குருவிளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. 24 உறுப்பினர்களைத் தேர்வு செய்து, தலைவராக ஜமுனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமை ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றார். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி பார்வையாளராக பங்கேற்றார். ஆசிரியர் பால மனோகரன் நன்றி கூறினார்.

