/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிகவரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும்: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
/
வணிகவரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும்: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
வணிகவரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும்: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
வணிகவரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும்: வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 01:51 AM
மதுரை: ''வணிக வரித்துறை அனுப்பும் வரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும்'' என மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
செப். 9 ல் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. தொழில் வணிகத் துறையினரின் சிரமத்தைப் போக்கும் வகையில் ஜி.எஸ்.டி., வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் முயற்சிக்கு இக்கூட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டும்.
ஜி.எஸ்.டி., சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 7 ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான சுற்றறிக்கைகள், கேள்வி பதில், சட்டவிதிகளில் திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை வரி ஆலோசகர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத அளவு சிக்கலாக உள்ளது. எனவே வணிக வரித்துறை அனுப்பும் வரி நோட்டீஸ்களை எளிமைப்படுத்த வேண்டும் என்றார் சங்கத் தலைவர் ரத்தினவேலு.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சட்டத்தை எளிமையாக்குவதில் முதற்கட்டமாக எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதில் இருக்கும் குழப்பம் தீர்க்கப்பட வேண்டும். உலக சுங்க அமைப்பால் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இணக்க முறையிலான பெயர் குறியீட்டு எண் (எச்.எஸ்.என்.) அடிப்படையில் ஜி.எஸ்.டி., வரி வீதம் விதிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.என்., கோடு முறையில் அனைத்துப் பொருட்களும் 21 பகுதிகளாகவும், அதன் கீழ் 99 பிரிவுகள், அதிலிருந்து 1244 தலைப்புகள் மற்றும் 5224 துணைத் தலைப்புகளாக பொருட்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஜி.எஸ்.டி., சட்டத்தில் இதே தலைப்புகள், துணைத் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வெவ்வேறான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே பொருளுக்கு வெவ்வேறான வரி வீதம் என தீர்ப்பு வழங்கியதில் இருந்தே ஜி.எஸ்.டி., வரிச் சட்டத்தில் குழப்பம் உள்ளதை நிரூபிக்கிறது. எச்.எஸ்.என்., கோடில் குறிப்பிட்டுள்ள 21 பகுதிகளின் அடிப்படையில் வரி விதிப்பதே இந்தக் குழப்பத்தை தீர்ப்பதற்கு ஒரே வழி.
ஒரு பகுதியில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் ஒரே வரி என்று நிர்ணயித்து ஜி.எஸ்.டி., வரிச் சட்டத்தை எளிமையாக்க வேண்டும். பல நாடுகளில் எல்லா பொருட்களுக்கும் ஒரே ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல அனைத்து மாநில தொழில் வணிகப் பிரதிநிதிகளையும் இணைத்து வர்த்தக ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்க வேண்டும்.
அதன் மூலம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கு முன் வர்த்தக ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றால் சட்ட அமலாக்கம் எளிமையாகும் என்றார்.