ADDED : ஜூலை 01, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மகளிர் ஆய்வு மையம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மைய இயக்குநர் அருணா வரவேற்றார். முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். மதுரை மகப்பேறு மருத்துவர் வாணி, உடல்நலப் பிரச்னைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மாணவிகள் பல்வேறு சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். உதவி ஒருங்கிணைப்பாளர் அலமேலுமங்கை நன்றி கூறினார்.
