/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடிகர் விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை ம.தி.மு.க., முதன்மை செயலாளர்
/
நடிகர் விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை ம.தி.மு.க., முதன்மை செயலாளர்
நடிகர் விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை ம.தி.மு.க., முதன்மை செயலாளர்
நடிகர் விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்: துரை ம.தி.மு.க., முதன்மை செயலாளர்
ADDED : செப் 09, 2024 06:16 AM
மதுரை : நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் பெரிய நட்சத்திரம். அவரால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் சந்தோஷம்தான். ஆனால் நடைமுறை அரசியல் ரொம்ப கஷ்டம் என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர் கூறியதாவது: கவர்னர் ரவி தமிழக பாடத்திட்டத்தை குறை கூறுகிறார். அவர் பதவியேற்றது முதல் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார். தமிழக கல்விமுறை சர்வதேச அளவில் சிறந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரபல டாக்டர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் படித்தவர்கள். சி.பி.எஸ்.இ., கல்விக்கு இணையானது.
நடிகர் விஜய் சினிமாவில் ஜொலிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம். அவரை அனைவரும் விரும்புகின்றனர். தமிழகத்திற்கு அவரால் நல்லது நடந்தால் சந்தோஷம்தான். அவர் கட்சிக் கொடி அறிமுக விழாவில் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் பற்றியும் கூறியுள்ளார். அதை வரவேற்கிறோம். அவர் நல்லது நினைக்கலாம். ஆனால் நடைமுறை அரசியல் மிகவும் கஷ்டமானது. கட்சியின் கொள்கையை விரிவாக கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அது என்னவென்று எதிர்பார்க்கிறோம்.
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு ஆர்.எஸ்.எஸ்., கோட்பாடுகளை திணிக்கிறார். பள்ளி நிகழ்ச்சியில் அவர் பேசியது சனாதன சொற்பொழிவு. தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை 40 ஆண்டுகளாக உள்ளது. இதற்கான தீர்வு மத்திய அரசிடம்தான் உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கடிதம்தான் எழுத முடியும். முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நான் பேசியுள்ளேன்.
இவ்வாறு கூறினார்.