/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அண்ணாமலை லண்டன் பயணத்திற்கு 'ஹேஷ்டாக்'
/
அண்ணாமலை லண்டன் பயணத்திற்கு 'ஹேஷ்டாக்'
ADDED : ஆக 28, 2024 04:01 AM
மதுரை : அரசியல் புத்தாய்வு படிப்புக்காக இன்று (ஆக., 28) லண்டன் செல்லும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாராட்டும் வகையில் பா.ஜ.,வினர் 'ஹேஷ்டாக்' டிரெண்ட் செய்கின்றனர்.
அண்ணாமலை அரசியல் புத்தாய்வு மாணவர் நிலை (பெல்லோஷிப்) படிப்புக்காக இன்று லண்டன் செல்கிறார். அங்கு 3 மாதங்கள் தங்கி படிக்கும் அவர், நவம்பரில் இந்தியா திரும்புகிறார். அங்கு தங்கியிருக்கும் கால கட்டத்தில், லண்டனில் இருந்தவாறே 'ஆன்லைன்' மூலம் கட்சிப் பணிகளையும் கவனிப்பார்.
அவரது லண்டன் பயணம் வெற்றி பெறவும், அவரை பாராட்டும் வகையிலும் 'அண்ணாமலை' என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்ய பா.ஜ., ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பா.ஜ.,வின் ஐ.டி.,விங் பொறுப்பாளர் அர்ஜூனாமூர்த்தி, தலைவர் எம்.எஸ்.பாலாஜி, துணைப்பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் இன்று காலை 8:00 மணி முதல் அதனை டிரெண்ட் செய்ய கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.