/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனைகளில் டீன்களை நியமிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : ஆக 28, 2024 03:52 AM
மதுரை, : மதுரை உட்பட தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டீன்களை நியமிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் அரசு மருத்துவமனைகளில் டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த பேராசிரியர்கள் டீன் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.
ஒரு துறையில் தலைவராக பணிபுரியும் மருத்துவ பேராசிரியர்கள் அனுபவம் குறைவால் பொறுப்பு டீனாக இருக்கும் போது நோயாளிகள், நிர்வாகம் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும்.
இதனால் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படும். அனுபவம், தகுதி, திறமையானவர்களை முழுநேர பணியில் டீன்களாக நியமிக்கக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,3 க்கு ஒத்திவைத்தது.