தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கனரக தொழிற்சாலைகள் வரவேண்டும்

கனரக தொழிற்சாலைகள் வரவேண்டும்

கனரக தொழிற்சாலைகள் வரவேண்டும்

1


ADDED : ஜூன் 26, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 09:21 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையைச் சுற்றி கனரக தொழிற்சாலை அமைக்க வேண்டுமென தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கூறியதாவது: மதுரை -– துாத்துக்குடி தொழில்வழிச் சாலையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பல ஆண்டுகளாகியும் பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படவில்லை. சென்னை முதல் காஞ்சிபுரம் வரை உள்ள பகுதிகளில் அந்நிய முதலீடுகளுடன் மிக பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. கோவை, திருப்பூரிலும் சில தொழிற்சாலைகள் உள்ளன. சென்னைக்கு அருகே துறைமுகம் இருப்பதைப் போல மதுரைக்கு அருகே துாத்துக்குடி துறைமுகம் உள்ளதால் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மதுரையைச் சுற்றி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ரோடுகளில் தொழிற்சாலைகளுக்கு தேவையான காலியிடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us