ADDED : ஜூன் 26, 2026 09:52 PM
சனி பிரதோஷம்
* மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவனுக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* ஈஸ்வரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், துவரிமான், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
* விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:00 மணி.
கோயில்
* ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பகவத்கீதை – விபூதி யோகம்: நிகழ்த்துபவர் – சுவாமி சிவயோகானந்தா, பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.
* பகவத்கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* ஆன்மிக சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் – ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.
* திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் – சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* 28வது பட்டமளிப்பு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, முன்னிலை: செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, சிறப்பு விருந்தினர்: ஏசியன் பெயின்ட்ஸ் சேர்மன் சேஷசாயி, பங்கேற்பு: கல்லுாரி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குரு பாஸ்கர், நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், மதியம் 2:00 மணி.
பொது
* இதயவியல் குறித்த கருத்தரங்கம்: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்பு விருந்தினர்கள்: மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், காலை 8:00 மணி, இதயவியல் துறைத் தலைவர் செல்வராணிக்கு பணிநிறைவு பாராட்டு விழா, ஏற்பாடு: மதுரை மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை இதயவியல் துறை, மதியம் 12:30 மணி.
* பொது அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம்: அரசு மருத்துவக் கல்லாரி, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கணேஷ், சிறப்பு விருந்தினர்கள்: டீன் அருள் சுந்தரேஷ் குமார், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தலைவர் மருதுபாண்டியன், ஏற்பாடு: பொது அறுவை சிகிச்சை துறை, காலை 11:45 மணி.
* காஞ்சி மஹா பெரியவர் பிரார்த்தனை மையம் திறப்பு விழா: 246, வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., கார்த்திகேயன், முன்னிலை: நடிகர் வையாபுரி, பங்கேற்போர்: ஆடிட்டர் சேது மாதவா, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர், திறந்து வைப்பவர்: முன்னாள் அமைச்சர் உதயகுமார், காலை 8:00 மணி, அனுஷ உற்ஸவத்தை முன்னிட்டு மஹா பெரியவர் விக்ரஹம், வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
* இலக்கிய விழா, விருது வழங்கும் விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன், ‘இளைய செம்மல்’ விருது பெறுபவர்: உலகத் திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், விருது வழங்குபவர்: தமிழறிஞர் சாலமன் பாப்பையா, ‘இலக்கியமும் சமுதாயமும்’ – இலக்கிய உரை நிகழ்த்துபவர்: கவிதா ஜவஹர், ஏற்பாடு: மக்கள் சிந்தனை பேரவை மாவட்ட கிளை, மாலை 5:00 மணி.
* குழந்தைகள் பாதுகாப்பு, சிறப்பு குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்: காளவாசல் முதல் எஸ்.எஸ்.காலனி தாம்ப்ராஸ் மஹால் வரை, மதுரை, காலை 7:30 மணி, கருத்தரங்கம்: தாம்ப்ராஸ் மஹால், மதுரை, முன்னிலை: பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி, சிறப்புரை: வழக்கறிஞர் செல்வ கோமதி, காலை 10:30 மணி, பெற்றோர் கூட்டம், கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: சாய்ராம் சிறப்பு பள்ளி, காலை 11:00 மணி.
* மதுரை இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆண்டு பொதுக்குழு கூட்டம்: தருமை ஆதீனம் சொக்கநாதர் மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: சேர்மன் சுராஜ் குமார், சிறப்பு விருந்தினர்: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் சுரேஷ், மாலை 5:45 மணி.
* பெதர்லைட் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: 151ஏ, வக்கீல் புதுத் தெரு, சிம்மக்கல், மதுரை, திறந்து வைப்பவர்: தங்கமயில் ஜூவல்லரி இணை நிர்வாக இயக்குநர் ரமேஷ், காலை 9:30 மணி.
* ஹிந்தி மொழி சான்றிதழ் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுவிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
மருத்துவம்
* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* உங்க வீடு உங்க சாய்ஸ் – அப்பார்ட்மென்ட் சேல் எக்ஸ்போ: ஓட்டல் ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
