நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகாவில் மேலவளவு, கீழவளவு கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பி.எஸ்.என்.எல்., அலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விபத்து, குற்றச்சம்பவம் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க அலைபேசி எண் உள்ளது. ஆனால் அந்த எண்ணிற்கு பல முறை 'ஹலோ' சொல்லியும் 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' உள்ளதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை.
அலைபேசி இணைப்புகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

