/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
/
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
UPDATED : ஜூலை 10, 2024 07:16 AM
ADDED : ஜூலை 10, 2024 04:15 AM

மதுரை : வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்கும் தேர்விற்கான நிபந்தனையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் கீழபுதுார் கேசவன் தாக்கல் செய்த பொதுநல மனு:எனது மகன் பிலிப்பைன்ஸில் எம்.பி.பி.எஸ்.,முடித்தார். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோர் இந்தியாவில் டாக்டர் தொழில் செய்ய அனுமதிக்க தேசிய மருத்துவ தேர்வு வாரியம் நடத்தும் ( எப்.எம்.ஜி.இ.,-ஸ்கிரீனிங் டெஸ்ட்) தேர்வில் பங்கேற்க வேண்டும். மொத்தம் 300 மதிப்பெண்ணில் 150 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சியடைந்ததாக கருதப்படும். எனது மகன் 2023 டிம்பரில் நடந்த தேர்வில் 149 மதிப்பெண் பெற்றார்.
தேர்வில் மறு மதிப்பீடு கிடையாது. இறுதி (கீ) விடைகள் மற்றும் தேர்வு தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படமாட்டாது என்ற நிபந்தனைகளுடன் தேசிய மருத்துவ தேர்வு வாரியம் 2024 ஜூனில் அறிவிப்பு செய்துள்ளது. இது சட்டவிரோதம். நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்தவர்களை யு.பி.எஸ்.சி., அல்லது இதர போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய கல்வித்துறை, தேசிய மருத்துவ கமிஷன் தலைவர், தேசிய மருத்துவ தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.