/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குண்டர் சட்ட கைது தடை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
குண்டர் சட்ட கைது தடை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
குண்டர் சட்ட கைது தடை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
குண்டர் சட்ட கைது தடை கோரிய மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 07, 2024 11:14 PM
மதுரை : சகோதரரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தடை கோரி அவரது சகோதரி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் சின்னபட்டி மகாலட்சுமி தாக்கல் செய்த மனு: எனது சகோதரர் சசி குமார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக அச்சப்படுகிறேன். கைது உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் தடுத்து வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே கலெக்டரால் முடிவு எடுக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். அவர் எத்தகைய முடிவை எடுப்பார் என்பதை இந்நீதிமன்றம் எதிர்பார்க்க முடியாது. மனுதாரரின் சகோதரர் ஏற்கனவே ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது. ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நிவாரணம் வழங்குவதற்கு முன்மாதிரியான வழக்கு எதுவும் இல்லை. மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. கலெக்டர் ஏதேனும் குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பித்தால் அதற்கு எதிராக மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். இம்மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது; தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.