/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரூர் புது பஸ் ஸ்டாண்ட் பணிக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
/
கரூர் புது பஸ் ஸ்டாண்ட் பணிக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் புது பஸ் ஸ்டாண்ட் பணிக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் புது பஸ் ஸ்டாண்ட் பணிக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 15, 2025 05:46 AM
மதுரை: கரூர் திருமாநிலையூரில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை தொடர தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் பழைய மத்திய பஸ் ஸ்டாண்டில், 50 பஸ்களை மட்டுமே நிறுத்த இடவசதி உள்ளது. ஒருங்கிணைந்த புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க, கரூர் மாநகராட்சி முடிவு செய்தது. சாணப்பிரட்டி, ஆத்துார், தோரணக்கல்பட்டியில் இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்யப்பட்டது.
திருமாநிலையூரில் 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க 2 பேர் முன்வந்தனர். இதை மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு ஏற்-றன. அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக அரசு 2013 ல் அர-சாணை பிறப்பித்தது.
இதற்கு எதிராக தடை கோரியும், தோரணக்கல்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க உத்தரவிடக்கோரியும் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: திரு-மாநிலையூரில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை மற்றும் கரூர் மாநகராட்-சியால் சட்டப்பூர்வமாக அனைத்து நடைமுறைகளும் முழுமை-யாக கடைபிடிக்கப்பட்டுள்ளன என்பதில், நாங்கள் முழு திருப்தி அடைகிறோம். அங்கு ஏற்கனவே 31 சதவீத பணி முடிந்துவிட்-டது. இந்நீதிமன்ற இடைக்கால உத்தரவால் பணி பாதியில் நிறுத்-தப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு மிக அவசியம். எந்தவொரு நியாய-மான காரணமும் இல்லாமல் இதுபோன்ற பொதுவான திட்-டத்தை தேவையில்லாமல் நிறுத்த முடியாது. இடைக்கால உத்த-ரவு கட்டுமானப் பணியைத் தொடர தடையாக இருக்காது என்-பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
திருமாநிலையூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பிறப்பித்த அர-சாணை உறுதி செய்யப்படுகிறது. தோரணக்கல்பட்டியில் அமைக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகி-றது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

