/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அட்டாக் பாண்டிக்கு பரோல் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அட்டாக் பாண்டிக்கு பரோல் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 08, 2025 03:36 AM
மதுரை : மதுரை கீரைத்துறை 'அட்டாக்' பாண்டி. கடந்த தி.மு.க., ஆட்சியில் மதுரை வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்தார். மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த 'பொட்டு' சுரேஷ் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கிலும் 'அட்டாக்' பாண்டி கைதானார். மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரது சகோதரி பஞ்சு,'எனது மகனுக்கு மார்ச் 9ல் திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்க 'அட்டாக்' பாண்டிக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு,'மார்ச் 9 அதிகாலை 5:00 முதல் மாலை 5:00 மணிவரை பரோல் அனுமதிக்கப்படுகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.