/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லேப் டாப்பை ஒப்படைக்க பா.ஜ., செயலாளர் வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : ஜூன் 19, 2024 04:52 AM
மதுரை : தன்னிடம் பறிமுதல் செய்த லேப்டாப், அலைபேசிகளை ஒப்படைக்க பா.ஜ., மாநில செயலாளர் சூர்யா தாக்கல் செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதுாறாக கருத்து வெளியிட்டதாக சென்னையில் சூர்யாவை சைபர் கிரைம் போலீசார் 2023 ஜூன் 16ல் கைது செய்தனர். அவருக்கு மதுரை (ஜெ.எம்.,1) நீதிமன்றம் 2023 ஜூன் 20ல் ஜாமின் அனுமதித்தது.
சூர்யா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த என்னிடம் லேப்டாப், ஐ-பேட், அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தடயவியல்துறை அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன்பிறகும் தேவையின்றி அந்த எலக்ட்ரானிக் பொருட்கள் நீதிமன்றம் அல்லது போலீசார் பாதுகாப்பில் உள்ளன. வைரஸ், பூஞ்சை மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பொருட்களை என்னிடம் இடைக்காலமாக ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து பொருட்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், மதுரை சைபர் கிரைம் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூலை முதல் வாரம் ஒத்திவைத்தார்.