/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெய்ஹிந்த்புரம் இணைப்பு பாலத்திற்காக பழங்காநத்தம் 'சப்வே'யில் போக்குவரத்துக்கு தடை போலீசிற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை

ADDED : செப் 04, 2024 07:05 AM
மதுரை : மதுரை பழங்காநத்தம் பாலத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கான பிரிவு அமைக்கும் பணி நடப்பதால் பாலத்தின் கீழ் போக்குவரத்தை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பழங்காநத்தத்தில் இருந்து டி.வி.எஸ்., நகருக்கு 2015 ல் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழ் 'அண்டர் பாஸ்' பாலமும் உள்ளது. இந்த மேம்பாலத்தில் ஜெய்ஹிந்துபுரம் பகுதிக்கு 300 மீட்டர் நீளத்திற்கு ஒரு பிரிவு (ஆர்ம்) அமைக்கப்பட வேண்டியிருந்தது.
இப்பிரிவை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த நீதிமன்ற வழக்கு காரணமாக இழுபறி நீடித்தது.
சமீபத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால் மேம்பாலத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு ஒரு பிரிவு பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மேல்தளத்தில் 'டெக்'குகள் அமைக்கும் பணி நடக்கிறது. மொத்தம் 13 டெக்குகளில் 10 அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவை மேம்பாலத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்காக 'பீம்'கள் அமைக்க கான்கிரீட் அமைக்க, கீழ்பகுதியில் இருந்து கம்பிகளால் முட்டுக் கொடுக்க வேண்டும். விரைவில் சப்வே பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி 'பீம்' அமைக்கும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை கோட்ட அதிகாரி மோகனகாந்தி, உதவி செயற்பொறியாளர் குட்டியான் உட்பட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இப்பணிக்காக போலீஸ் அனுமதி கிடைத்ததும் 'சப்வே' பகுதியில் மட்டும் போக்குவரத்து நிறுத்தப்படும். ஓரிரு மாதங்களில் பணி முடிந்த பின் இவ்வழியில் மீண்டும் போக்குவரத்து துவங்கும். இப்புதிய பிரிவு பாலம் அமைந்தபின் மேம்பாலம் வழியாக ஜெய்ஹிந்த்புரம் செல்ல வழிபிறக்கும்.