/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் ஹிந்து மகா சபா வலியுறுத்தல்

ADDED : ஆக 26, 2024 06:52 AM
மேலூர்: மேலூரில் ஹிந்து மகா சபா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில விவசாய அணி செயலாளர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொது செயலாளர் சங்கரன் வரவேற்றார். புறநகர் தலைவர் சிவக்குமார், மாநகர் தலைவர் சஞ்சீவி குமார் முன்னிலை வகித்தனர். தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் செல்லதுரை பேசினர்.
சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
இந்திய ரூபாய் நோட்டில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் படம் இடம் பெற செய்ய வேண்டும். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கொண்டு வர வேண்டும். பசுவதை தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஹிந்து கோயில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை ஹிந்துக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணை தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் வெள்ளை தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.