/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி: சவுராஷ்டிரா கல்லுாரி அணி வெற்றி
/
ஹாக்கி: சவுராஷ்டிரா கல்லுாரி அணி வெற்றி
ADDED : ஆக 19, 2024 01:16 AM

திருப்பரங்குன்றம்: மாநில ஹாக்கி போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற சவுராஷ்ட்ரா கல்லுாரி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கல்லுாரியில் நடந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடந்தது. இதில் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அணி இரண்டாம் இடம் பெற்றது. அணி வீரர்களுக்கு கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஷ்வரன், முரளிதரன், முதல்வர் சீனிவாசன் பாராட்டினர்.
முன்னாள் உடற் கல்வி இயக்குனர் ரவீந்திரன் கூறுகையில், ''எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் சுழற் கோப்பைக்காக நடந்த போட்டிகளில் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறந்த 12 கல்லுாரி ஹாக்கி அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்., பல்கலை ஒயிட் அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியை வென்றது என்றார்.