/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகர கூட்டுறவு வங்கி வாராக் கடன் எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி
/
நகர கூட்டுறவு வங்கி வாராக் கடன் எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி
நகர கூட்டுறவு வங்கி வாராக் கடன் எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி
நகர கூட்டுறவு வங்கி வாராக் கடன் எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஆக 20, 2024 01:05 AM
மதுரை : மதுரை நாயக்கர் புதுத்தெருவில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டது. இதில் நடந்த முறைகேடுகளால் வங்கி கலைக்கப்பட்டது. வங்கியில் டெபாசிட் செய்து பாதிக்கப்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2008 ல் மனு தாக்கல் செய்தனர். அதில்,'ரூ.20 கோடியே 28 லட்சத்து 77 ஆயிரத்து 943 ஐ வட்டியுடன் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்,' என குறிப்பிட்டனர்.
இதுபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தரப்பு,'வங்கியில் டெபாசிட் செய்த ரூ.1 கோடியே 10 லட்சத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும், 'என மனு செய்தது.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: வங்கியில் வாராக்கடன் நிலுவை எவ்வளவு, அதை வசூலிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலைத்தல் அதிகாரி ஆக.28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.