sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'நான் அவன் இல்லை...' பாணியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

/

'நான் அவன் இல்லை...' பாணியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

'நான் அவன் இல்லை...' பாணியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

'நான் அவன் இல்லை...' பாணியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு


ADDED : செப் 01, 2024 04:56 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி, : சாணிபட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் தலா 75 பேர் மாறி மாறி 11 குழுக்களாக பணிபுரிகின்றனர். என்ன வேலை, வருகைப்பதிவு, வேலை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் படம் எடுத்து 'அப்டேட்' செய்ய வேண்டும். அப்போதுதான் ரூ.230 சம்பளம் வரவு வைக்கப்படும். இப்பணியில் பணித்தள பொறுப்பாளர் ஷீலா, மக்கள் நலப்பணியாளர் கலைஜோதி ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு செப்டம்பரில் 150 பேர் 13 நாட்கள் வேலை பார்த்தனர். இதற்கான வருகை பதிவேட்டை காணவில்லை என்கின்றனர். அதனால் சம்பளம் வரவு வைக்கவில்லை. வேலை இடத்தில் குறிப்பிட்ட எண்ணில் கணக்கு துவங்கி பணியாளர்களின் படத்தை 'அப்டேட்' செய்ய வேண்டும். ஆனால் பணித்தள பொறுப்பாளர், தனக்கு வேண்டிய நபர்களின் பெயர்களில் கணக்கு துவங்கி, அதில் வேலை பார்ப்பவர்களின் படத்தை 'அப்டேட்' செய்துள்ளார்.

குறிப்பாக வெவ்வேறு எண்ணிற்கு ஒரே ஆட்களை முன் பின்னாக நிற்க வைத்து சம்பளத்தில் முறைகேடு செய்கின்றனர். உதாரணமாக ஆக., 27ல் 5323, 5334 என்ற இரண்டு எண்ணிற்கு ஒரே ஆட்களை மாற்றி நிற்க வைத்து படம் எடுத்துள்ளனர்.

அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்களை கொண்டு தான் வேலை பார்க்க வேண்டும் என்பது விதி. ஆனால் பணித்தள பொறுப்பாளர் தனக்கு வேண்டிய ஆட்களை வேறு கிராமத்தில் இருந்து வரவழைத்து வேலை பார்க்க வைக்கிறார். முறைகேடுகள் குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றனர்.

பணித்தள பொறுப்பாளர் ஷீலா கூறுகையில், ''குறித்த நேரத்திற்கு வராத உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு பதிலாக வந்தவர்களை முன் பின்னாக நிற்க வைத்து படம் எடுத்தேன். ஆனால் காலதாமதமானாலும் வேலைக்கு ஆட்கள் வந்து விடுவார்கள்'' என்றார்.

மக்கள் நலப்பணியாளர் கலைஜோதி கூறுகையில், ''வேலை ஆட்களை மாற்றி நிற்க வைத்து படம் எடுக்க வேண்டாம் எனக் கூறியதையும் மீறி பணித்தள பொறுப்பாளர் படம் எடுத்ததே பிரச்னைக்கு காரணம். 2023ல் செப்.,9ல் பணியாளர்கள் வருகை பதிவேட்டை காலதாமதமாக கொடுத்ததால் 6 நாள் பணம் வரவு வைக்கவில்லை'' என்றார்.






      Dinamalar
      Follow us