ADDED : ஜூலை 12, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் குறித்த மாவட்ட முதன்மை கருத்தாளர்களுக்கான மண்டல பயிற்சி முகாம் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 10 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.
உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மாநில கருத்தாளர்கள் திலகவதி, ஷெரீன், விஜய் அசோகன், திட்ட மோண்மைக்குழு அலுவலர்கள் மாலா பகவதி, சிந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

