/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமர் மோடியிடம் கூறி தொகுதிக்கு தேவையான திட்டங்களை செய்வேன் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்

ADDED : ஏப் 16, 2024 04:43 AM

தேனி: ''பிரதமர் மோடியிடம் கூறி தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வேன்,'' என தேனி தொகுதி அ.ம.மு.க., தினகரன் தேனி அருகே ஆதிபட்டியில் பிரசாரம் செய்தார்.
போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: தொகுதியில் முன்பு எம்.பி.,யாக இருந்த போது எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அவரிடம் கேட்டு தொகுதிக்கு தேவையானதை செய்து கொடுத்தேன். தற்போது அவர் இல்லை.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார். அவரிடம் கேட்டு தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வேன். சிலர் செய்த சதியால் தொகுதிக்கு வர இயலவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பது உங்கள் பணத்தை உங்களிடம் கொடுக்கின்றனர்.
உங்களுக்கு தேவையானதை நான் சொந்த செலவில் செய்வேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பது அவமானப்படுத்தும் செயல்.
இதற்கு முன் எனக்கு பணம் வாங்காமல் ஓட்டளித்தீர்கள். இந்த பகுதியில் ஆளுங்கட்சி துணையுடன் நடைபெறும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்தி நிறுத்தினால் இளைஞர்கள் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
தனிமனிதர் வருமானத்தை பெருக்கும் திட்டங்களையும் நிறைவேற்றுவேன் என்றார்.