ADDED : மார் 12, 2025 01:18 AM
மதுரை; 'அரசு மானியம் பெற விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்யப்படுவதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனே பதிவு செய்ய வேண்டும்' என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
விவசாயம் சார்ந்த மானிய பயன்களைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு முறையும் பல விதமான ஆவணங்களை வழங்க வேண்டியுள்ளது. இதை சுலபமாக்கும் வகையில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி அடையாள எண் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த எண் அடிப்படையில் தான் அனைத்து விவசாய நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. தங்கள் கிராமத்தில் நியமிக்கப்பட்ட தோட்டக்கலை, வேளாண் அலுவலர்கள், சமுதாய வளப் பணியாளர்களிடம் ஆதார், கம்ப்யூட்டர், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்றார்.