ADDED : ஆக 28, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மேலுார் நகரில் உள்ள 27 வார்டுகளை சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. நகர் ஜெ., பேரவை செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார்.
எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா வழங்கினார்.
சொக்கம்பட்டி, சந்தைப்பேட்டை, தெற்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், நகர் துணை செயலாளர் பாண்டிலட்சுமி, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

