/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனு மீது நடவடிக்கை எடுத்தாச்சா... கமிஷனரை தொடர்ந்து மேயரும் 'செக்'
/
மனு மீது நடவடிக்கை எடுத்தாச்சா... கமிஷனரை தொடர்ந்து மேயரும் 'செக்'
மனு மீது நடவடிக்கை எடுத்தாச்சா... கமிஷனரை தொடர்ந்து மேயரும் 'செக்'
மனு மீது நடவடிக்கை எடுத்தாச்சா... கமிஷனரை தொடர்ந்து மேயரும் 'செக்'
ADDED : செப் 04, 2024 06:54 AM

மதுரை : மதுரையில் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என சம்பந்தப்பட்ட மனுதாரர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் அலைபேசியில் அழைத்து பேசி உறுதிப்படுத்தினார்.
மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடந்தது. குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை வசதி, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில்வரி விதிப்பு உட்பட 44 மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன.
இம்மண்டலத்தில் ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் மேயரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது 10க்கும் மேற்பட்ட மனுதாரர்களுக்கு அலைபேசியை தொடர்புகொண்டு 'உங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்தாச்சா' என விசாரித்தார். ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 'மனுதாரரிடம் தேவைப்படும் ஆவணங்களை கேட்டு பெற்று மீண்டும் பரிசீலிக்கவும். ஆவணங்கள் இல்லை எனக் கூறி நிராகரிக்கக்கூடாது' என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதுபோன்று கமிஷனர் தினேஷ்குமாரும் அலைபேசியில் மனுதாரர்களிடம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் துணைமேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, உதவி கமிஷனர் ஷாஜஹான், நகர்நல அலுவலர் வினோத்குமார், சி.டி.பி.ஓ., மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர் சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆனந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.