sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் இருந்தால் ராணுவ விஞ்ஞானியாகலாம்

/

புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் இருந்தால் ராணுவ விஞ்ஞானியாகலாம்

புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் இருந்தால் ராணுவ விஞ்ஞானியாகலாம்

புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் இருந்தால் ராணுவ விஞ்ஞானியாகலாம்


ADDED : மார் 25, 2024 06:43 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: புதிய சிந்தனை, ஆராய்ச்சி எண்ணங்கள் உள்ள மாணவர்கள் எளிதில் விஞ்ஞானியாகலாம் என பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி டில்லிபாபு தெரிவித்தார்.

மதுரையில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்த ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு விழா தமுக்கம் மைதானத்தில் நடந்தது.

இதில் விஞ்ஞானியாவது எப்படி என்ற தலைப்பில் டில்லிபாபு பேசியதாவது:

பிளஸ் 2வுக்கு பின் உங்கள் இதயத்திற்கு பிடித்தமான படிப்பை தேர்வு செய்யுங்கள். பி.இ., படித்த எனக்கு மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' படித்த பின் தான் ராணுவத்தில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது. அறிவியலை மதிப்பெண்ணுக்கானதாக மாற்றிவிடக் கூடாது. புதுமையான சிந்தனை, ஆராய்ச்சியில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் எளிதில் விஞ்ஞானியாகலாம். புதிதாக சிந்திப்பவர்கள் மட்டுமே எதிர்காலத்தை ஆளப்போகின்றனர்.

அடிப்படையில் கோர் இன்ஜி., படிப்பு படித்து, பட்டமேற்படிப்பில் சிறப்பு பிரிவு படிக்கலாம். ராணுவத்தில் அணுசக்தி, விண்வெளி உட்பட்ட பிரிவுகள் இருந்தாலும் பாதுகாப்புத் துறையில் மட்டும் போர்க்கப்பல் தயாரிப்பு, ராக்கெட், ஏர்கிராப்ட், மின்னணு தகவல் தொடர்பு, ஏ.ஐ., தானியங்கி தொழில்நுட்பம் உள்ளிட்ட 7 ஆராய்ச்சி பிரிவுகள் உள்ளன.

புனேயில் ராணுவ பல்கலையே உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மூலம் தான் பல பாதுகாப்புக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. உடனடி மிலிட்டரி பாலம் ஒன்றரை மணிநேரத்தில் தயாரிக்கப்பட்டது. வெள்ளம் ஏற்படும் போது மிதக்கும் பாலம் உருவாக்கப்பட்டன. மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டறிந்து வெளியேற்றும் உத்திக்கு சில்லி ஸ்பிரே, 40 ஆயிரம் அடிகள் உயரத்தில் பறக்கும் ராணுவ பைலட்களுக்கு அங்கேயே ஆக்சிஜன் தயாரிக்கும் தொழில்நுட்பமாக 'மெடிக்கல் ஆக்சிஜன் பிளான்ட்' (எம்.ஓ.பி.,) கண்டறியப்பட்டது. கோவிட் பேரிடர் காலத்தில் சிக்கித்தவித்த மக்களை காப்பதற்கு 1 நிமிடத்தில் ஆயிரம் எம்.ஓ.பி., க்கள் தயாரிக்கப்பட்டன.

இதுபோன்ற உன்னத பணியில் ஈடுபடும் அதிகாரி ஆக, பி.இ., படித்தவுடன் நுழைவு தேர்வு (விஞ்ஞானி நுழைவுத் தேர்வு) மூலம் சேரலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் பொறியியல் படித்து 80 சதவீதம் மேல் மதிப்பெண்கள் பெற்றால் நுழைவு தேர்வு தேவையில்லை. ராணுவ படிப்புகளில் படிக்கும் போதே கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இஸ்ரோ, அணுசக்தி மையங்கள், அறிவியல் தொழில்நுட்ப துறைகள், மருத்துவ ஆராய்ச்சி அல்லது வேளாண்மை ஆராய்ச்சி துறைகளில் விஞ்ஞானிகளாகலாம்.

அதிக சம்பளத்தில் வேலை


அம்ரிதா பல்கலை பேராசிரியர் மகேஷ்குமார் பேசியதாவது:

கணித திறன் உள்ள மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு செய்யலாம். மனிதர்களை போல் ரோபோக்களை சிந்திக்க வைக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம், சரியான முடிவுகளை அறிய உதவும் டேட்டா சயின்ஸ் படிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டேஷன் சயின்ஸ், சாப்ட்வேர் இன்ஜி., உள்ளிட்ட பிரிவுகளும், தகவல் தொழில்நுட்பத்தில் டேட்டா பேஸ், சைபர் செக்யூரிட்டி படிப்புகளை தேர்வு செய்யலாம். இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளில் 'கணிதம் வராது' என்பவர்களும் சேரலாம். டிவைசஸ்கள் தேவை இருக்கும் வரை இதுபோன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பல லட்சங்களில் சம்பளம் பெறலாம்.






      Dinamalar
      Follow us