/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலத்தில் நடந்தால் சும்மா அதிருதில்ல...
/
பாலத்தில் நடந்தால் சும்மா அதிருதில்ல...
ADDED : ஆக 25, 2024 04:57 AM

மேலுார்:நா. கோவில்பட்டியில் பெரியாற்று கால்வாயை விவசாயிகள் கடந்து செல்லும் போது பாலம் அதிர்வதால் அச்சத்தில் உள்ளனர்.
கள்ளந்திரி -- குறிச்சிபட்டி வரையிலான ஒருபோக பாசன பகுதிக்கு 12வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதால் 86 ஆயிரம் ஏக்கர் பயன் பெறுகின்றன.
கால்வாயின் ஒருபுறத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. மறுபுறத்தில் மொட்டை பிள்ளையார் கோயில் ரோட்டில் விவசாயிகள் வசிக்கின்றனர். இக்கால்வாயை கடக்க நீர்வளத்துறை சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாலம் சிதிலமடைந்துள்ளது.
விவசாயி சாந்தி: அறுவடை செய்யும் விளை பொருட்களை குடியிருப்புகளுக்கு பாலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும். பாலத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் துருப்பிடித்து உதிர ஆரம்பித்துள்ளன. பாலத்தின் இரும்பு கைப்பிடி விழுந்து விட்டது. கால்வாயில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு உறுதிதன்மை கேள்விக் குறியாகி உள்ளது.
பாலத்தில் நடந்தாலே அதிர்வு ஏற்படுவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர் என்றார்.

