ADDED : ஏப் 05, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ரம்ஜான் பண்டிகையையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் அழகுராம்ஜோதி வரவேற்றார்.
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது: எந்த மதம், வழிபாட்டு முறையை பின்பற்றுகிறோம் என்பது தேவையில்லை. மனிதனை மனிதனாக பார்ப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு. மனமாச்சரியங்களை மறந்து மனிதனைமனிதனாக மதிக்க வேண்டும் என்றார்.
நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் முகமது முகைதீன், மதுரை தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் ஆசிக் பிர்தோசி பங்கேற்றனர். ஏழைகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஆயிரம் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

