/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தி.மு.க., பிரமுகர் தீக்குளிப்பு
/
மதுரையில் தி.மு.க., பிரமுகர் தீக்குளிப்பு
ADDED : ஆக 30, 2024 06:23 AM

மதுரை: மதுரையில் தி.மு.க., நகர் செயலாளர் தளபதி வீடு அருகே அக்கட்சி பிரமுகர் கணேசன் 73, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
மதுரை மானகிரியை சேர்ந்த இவர், ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆவின் தி.மு.க., தொழிற்சங்க கவுரவ தலைவராக உள்ளார். நேற்று காலை மூலக்கரையில் தளபதி வீட்டிற்கு ஆட்டோவில் சென்று மனு அளித்தார். வெளியே வந்த அவர் மஞ்சள் பையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தளபதி கூறுகையில் அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. கோரிக்கை மனுவுடன் வந்து சந்தித்தார். செய்து தருகிறேன் என கூறி அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியே சென்று தீக்குளித்தது அதிர்ச்சியாக உள்ளது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.
இவர், தமிழக கவர்னர் ரவியை மாற்றக் கோரி மதுரை சிம்மக்கல் கருணாநிதி சிலை முன் ஏற்கனவே தீக்குளிக்க முயன்று கைதானார். கட்சியினர் சிலர் மீது புகார் அளித்துவந்த நிலையில் 'கட்சியால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தீக்குளிக்க போவதாக' கூறி முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட செயலாளர் உள்ளிட்டோருக்கு தபாலில் கடிதம் அனுப்பியிருந்தார்.

