/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மன்னுயிர் காப்போம் திட்டம் துவக்க விழா
/
மன்னுயிர் காப்போம் திட்டம் துவக்க விழா
ADDED : ஜூன் 15, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : வேளாண் துறை சார்பில் முதல்வரின்மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட துவக்க விழா மதுரை கலெக்டர் சங்கீதா தலைமையில் மேற்கு பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது.
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள், பழச்செடி கன்றுகளை கலெக்டர் வழங்கினார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் அமுதன் பல்வேறு வேளாண் திட்டத்தின் பயன்களை விளக்கினர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி (விவசாயம்) மண் வளத்தை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்களை விளக்கினார். மதுரை மேற்கு தெற்கு பெத்தாம்பட்டி கிராம விவசாயி வசந்தன் வயலில் தக்கைப்பூண்டு விதைகள் விதைக்கப்பட்டன.