ADDED : மே 04, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் பா.ஜ., வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
வழக்கறிஞர் அணி தலைவர் அய்யப்பராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராமராஜ், செயலாளர் வடிவேலு, மனோன்மணி முன்னிலை வகித்தனர். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, ஓ.பி.சி., அணி பொருளாளர் மோகன்குமார், முன்னாள் ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் பங்கேற்றனர்.