/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
/
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
ADDED : ஆக 16, 2024 04:38 AM

மதுரை: மாவட்டம் முழுவதும் நேற்று 78 வது சுதந்திர தினவிழா அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது அமைப்புகள் சார்பில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்கள்
மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் கொடி ஏற்றினார். கமிஷனர் தினேஷ்குமார், பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன் பங்கேற்றனர். பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் பாராட்டப்பட்டனர். ஆனையூர், செல்லுார், அண்ணாத்தோப்பு, தெற்கு வாசல், திருநகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவக் குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மதுரை கோட்ட ரயில்வே திடலில் நடந்த விழாவில் மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கொடி ஏற்றினார். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் நாகேஸ்வரராவ், பாதுகாப்பு படை கமிஷனர் கார்த்திகேயன், ஊழியர் நல அதிகாரி சங்கரன் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சந்தோஷ் கொடி ஏற்றினார். ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசுந்தரம், மேலாளர் வினோத் வெங்கடேசன், ஊழியர்கள் தனபாக்கியம், லட்சுமணன், மகேஷ்வரன் விஷ்ணு சிங் பங்கேற்றனர்.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றினார். மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கொடியேற்றினார். துணை அலுவலர் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ஷாலினி கொடியேற்றினார். லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்கள் சிவபாலன், கோபி, பழனி, மஸ்தான் கனி, பிரபாகரன், மூர்த்தி ஆகியோருக்கு விருதுவழங்கினார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் தேசிய கொடியேற்றினார். ரத்ததான முகாம், கலை நிகழ்ச்சி, சி.ஐ.எஸ். எப்., வீரர்களின் அணிவகுப்பு,சாகச நிகழ்ச்சி நடந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் கொடியேற்றினார். மதுரை மத்திய சிறையில் மற்றும் பெண்கள் தனி சிறையில் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கொடியேற்றினார். மத்திய சிறையில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலையில் படித்த ஆறு சிறைவாசிகளுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, போலீஸ் அதிகாரிகள், பயிற்றுநர்கள் மரக்கன்று நட்டனர். டி.எஸ்.பி. (ஓய்வு) அய்யாசாமி, இன்ஸ்பெக்டர் சரவணன் கலந்து கொண்டனர். கிரீன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ஸ்டீபன், தலைமையாசிரியர் அந்தோணி பால்ராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் சிங்காரவேலு கொடியேற்றினார். அவர் பேசுகையில், ''மதுரை கோட்டத்தில் கட்டணமில்லா சேவையால் தினமும் 6 லட்சம் பெண்கள் பஸ்களில் பயணிக்கின்றனர். ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன'' என்றார். பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல பொதுமேலாளர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரிகள்
மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூரியபிரபா கொடி ஏற்றினார். நிர்வாக அலுவலர் செல்வக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திபிரகாஷ், தசரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா கொடி ஏற்றினார். துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பாண்டியராஜன் செய்தார்.
மதுரை கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கொடி ஏற்றினார். தாளாளர் தேவன் குமார், முதல்வர் முருகேஸ்வரி, துணை முதல்வர் தங்கமுனியாண்டி பங்கேற்றனர். கீழமாத்துார் ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் 100 அடி உயர கம்பத்தில் 30 அடி தேசிய கொடியை தாளாளர் சந்திரன் ஏற்றி பேசினார். நிர்வாக இயக்குனர் அபிலாஷ் வரவேற்றார். இணை இயக்குனர் நிக்கிபுளோரா, முதல்வர் ஞானசுந்தரி பங்கேற்றனர். மதுரை பைபாஸ் ரோடு அரோபனா இந்தியன் பள்ளியில் தாளாளர் சந்திரன் கொடி ஏற்றினார். நிர்வாக இயக்குனர் அபிலாஷ் வரவேற்றார். இணை இயக்குனர் நிக்கிபுளோரா, துணை முதல்வர் விமலா நிகில் பங்கேற்றனர்.
மதுரை காமராஜ் பல்கலையில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மயில்வாகனன் கொடியேற்றினர். பதிவாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை பழைய நத்தம் ரோட்டில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் சோமசுந்தரம் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன், மூத்த உறுப்பினர் சோமசுந்தரம், தலைமை ஆசிரியை சாய்கீதா, ஆசிரியை இந்திராதேவி பேசினர். மதுரை தி டி.வி.எஸ் பள்ளியில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் கொடியேற்றினார். மதுரை தானம் மக்கள் கல்வி நிலையத்தில் இயக்குநர் ஜேம்ஸ் சாமுவேல் கொடியேற்றினார். தானம் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் வாசிமலை, டி. மலைப்பட்டி அலுவலகத்தில் இயக்குநர் குருநாதன் கொடியேற்றினர்.
தனக்கன்குளம் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் கொடியேற்றினார். ஊராட்சிமன்றத் தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் (ஓய்வு) சக்கன் , திருநகர் ஜெயின்ட்ஸ் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அரசு சட்டக்கல்லுாரி என்.எஸ்.எஸ். திட்டம் சார்பில் முதல்வர் குமரன் கொடியேற்றினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் தமிழ்மணி, குபேந்திரன், ஆனந்தன் செய்தனர். மதுரை சேவாலயம் மாணவர்கள் விடுதியில் தொழிலதிபர் ஞானசிகாமணி பீரோ வழங்கினார். மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார். மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் வானதி கொடியேற்றினார். தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா, இணைப்பேராசிரியை அருணா சுதந்திர தினவிழா குறித்து பேசினர். இணைப்பேராசிரியை சத்தியா நன்றி கூறினார்.
திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரியில் முதல்வர் அப்துல் காதர் கொடியேற்றினார். மாணவி செல்ஷியா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அன்புச்செல்வி, விக்னேஸ்வர சீமாட்டி, அகிலா ராஜ், திலீபன் செய்தனர். புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி முகமது இதிரிஸ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவித்தலைமையாசிரியர் ரகமத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். என்.எம்.எம்.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சிவகார்த்திக்கிற்கு சாக்ஸ் நிர்வாக பங்குதாரர் கோபிநாத் பரிசு வழங்கினார்.
மதுரை யாதவர் கல்லுாரியில் முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடியேற்றினார். முதல்வர் ராஜூ, தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், துணைச் செயலர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பீ.பி.குளம் தனபால் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தினேஷ், ஆசிரியர்கள் உஷாராணி, திருநாவுக்கரசு, வெள்ளைத்தாய் கலந்து கொண்டனர்.
அக்ரிணி வளாகம் மை மதுரை மாண்டிசோரி பள்ளியில் தாளாளர் கீதா கொடி ஏற்றினார். சுகாதார அலுவலர் கோபால், சுற்றுலாத்துறை வழிகாட்டி பிரபு, தொழிலதிபர் கலா, துணை முதல்வர் அபரஜிதா, இயக்குனர் கண்ணன் பங்கேற்றனர். அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் கொடி ஏற்றினார். முதல்வர் கவிதா, மாணவி கீர்த்திகா பேசினர். விரகனுார் கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, குமரேஷ், முரளிதரன் பேசினர். திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ அதிகாரி சாந்தாராம் கொடி ஏற்றினார்.
பொது அமைப்புகள்
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் திருமுருகன் கொடி ஏற்றினார். செயலாளர் விஜிஸ் உறுதிமொழி வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பால்கனி, செல்வம், மாரிமுத்து, கார்த்திகேயன் அறிவுமணி, உறுதிமொழி ஏற்றனர். பொருளாளர் விஜயன் இனிப்பு வழங்கினார். நிர்வாகி வேணுகோபால் நன்றி கூறினார்.
மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நிறுவனர் ரத்தினவேல் கொடி ஏற்றினார். விவசாய, உணவு பதனீட்டு துறைகளின் வளர்ச்சி, மத்திய மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை விவரித்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க விழாவில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். பொருளாளர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர்கள் செல்வம், ஜீயர் பாபு, ரமேஷ், இணைச் செயலாளர்கள் ராஜீவ், கணேசன் பங்கேற்றனர். தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க விழாவில் தலைவர் வேல்சங்கர் கொடி ஏற்றினார். மதுரை வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் திருப்பதி கொடி ஏற்றினார். பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கநாதன், துணைத் தலைவர்கள் தேசியமணி உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை கோமதிபுரத்தில் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், ஸ்ரீநாக்ஸ் என்விரோ அமைப்பு விழாவில் ஸ்ரீநாக்ஸ் செயல் இயக்குனர் வெங்கடபதி கொடி ஏற்றினார். அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திராபதி முன்னிலை வகித்தார். கனரா வங்கி முதன்மை மேலாளர் காயத்ரி பங்கேற்றார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடத்தப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் செல்லையா, சுப்புலட்சுமி, இணை கமிஷனர் கிருஷ்ணன், மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் பங்கேற்றனர்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், வல்லாளபட்டி பேரூராட்சி தலைவர் குமரன், வலையபட்டி ஊராட்சி தலைவி தீபா தங்கம், துணைத் தலைவர் ராமலட்சுமி தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி பங்கேற்றனர்.
மாநகராட்சி இலந்தைக்குளம் குடியிருப்போர் நலச்சங்க விழாவில் தலைவர் இளங்கோ, செயலாளர் பாஸ்கரன் தலைமையில், துணைத் தலைவர் அபுதாகீர் கொடியேற்றினார். நிர்வாகிகள் மரியராஜா, கிருஷ்ணன், பாண்டியராஜன், அலிசித்திக், ராமு, கார்த்திக்குமார் பங்கேற்றனர். ஜெய்ஹிந்துபுரம் தாம்ப்ராஸ் கிளை சார்பில் துணைத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்ரமணியன் கொடியேற்றினார். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் ராஜம் மீனாட்சி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
குறிஞ்சிமலர் லயன்ஸ் சங்கம், ரோட்டரி கிளப் ஆப்மதுரை, மனோகரா நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளிச் செயலாளர் தினேஷ் பால் வரவேற்றார். ரோட்டரிசங்க நிர்வாகி ஆனந்தகுமார் கொடியேற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் உறுப்பினர் திலகர், ரோட்டரி சங்க செயலாளர் மதிமாறன் பங்கேற்றனர். மதுரை பொன்மேனி ராகவேந்திராநகர் சிலம்பம் கலைக்களம் சார்பில் நடந்தவிழாவில் பயிற்சியாளர் கரிகாலன் தலைமையில், லயன்ஸ் சங்க நிர்வாகி பொறியாளர் சந்தோஷ்குமார் கொடியேற்றினார். மதுரை சாந்திசதன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் லோகநாதன், செயலாளர் ரமேஷ்ஜெயராமன் கொடியேற்றினர். பொருளாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் பாஸ்கர் பங்கேற்றனர். ஆனையூர் மஸ்ஜிதே இப்ராஹிம் ஜூம்ஆ பள்ளிவாசலில் தலைவர் பாபுஜி, இப்ராஹிம், நாசர்உசேன், முஜிபுல்லா, சர்தார் மற்றும், ஜமாத்தார்கள் பங்கேற்று இனிப்பு வழங்கினர்.
கூடலழகர் கோயிலில் உதவி கமிஷனர் யக்ஞ நாராயணன் கொடியேற்றினார். பக்தர்கள், கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம் அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயங்களில் கொடியேற்றப்பட்டது. பாதிரியார்கள் ஜோசப், அருள்சேகர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர்.
தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மதுரை கிளைகளின் சார்பில் பழங்காநத்தம் கிளையில் மாவட்ட தலைவர் ரவி கொடியேற்றினார். செயலாளர் ஸ்ரீராமன் வரவேற்றார். பழங்காநத்தம், சிம்மக்கல், எஸ். எஸ். காலனி, அண்ணாநகர், - எல்லீஸ் நகர், விளாங்குடி கிளைத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உப தலைவர் விஸ்வநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தார். காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் பேராசிரியை முத்துலட்சுமி கொடியேற்றினார். மியூசிய செயலாளர் நந்தாராவ், காந்தி நினைவு நிதி செயலாளர் சரஸ்வதி, அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன், ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தலைவர் நெல்லை பாலு, கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.
கட்சிகள்
மதுரை காளவாசல் பகுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் டி.எம்.பாலகிருஷ்ணன் தலைமையில், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைபொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், மண்டல் தலைவர் ரங்கராஜன், டாக்டர் முரளிபாஸ்கர் கொடியேற்றினர். மதுரை ஜி.ஆர்., நகரில் பா.ஜ., ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் கொடியேற்றினார். ஆழ்வார்புரம் மூங்கில் கடை தெரு, காமராஜர் சாலை காந்தி பொட்டல் காந்தி சிலை அருகே, கீரைத்துறை மற்றும் தெற்கு வாசல், மேலமாசி வீதி, பேச்சியம்மன் படித்துறை, விளாங்குடி பகுதிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, கவுன்சிலர் முருகன், துணைத் தலைவர்கள் பாலு, சிலுவை, நல்லமணி பங்கேற்றனர். மதுரை எஸ்.டி.பி.ஐ., தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொடியேற்றினார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், செயலாளர் ஆரிப் கான், துணைத்தலைவர் அபுதாஹிர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம் ராமையா, துணை கமிஷனர் சுரேஷ், தாசில்தார் கவிதா பங்கேற்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கு மண்டல தலைவர் சுவிதா தேசிய கொடி ஏற்றினார். கவுன்சிலர்கள், ரவிச்சந்திரன் விஜயா, முத்துலட்சுமி, போஸ், உதவி கமிஷனர் ராதா பங்கேற்றனர். ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் வேட்டையன் கொடி ஏற்றினார். கமிஷனர் செந்தில் மணி, பி.டி.ஓ., பேராட்சி பிரேமா, துணை சேர்மன் இந்திரா பங்கேற்றனர்.
ஹார்விப்பட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் ஓய்வுபெற்ற தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற பொறியாளர் ராஜாராம் கொடி ஏற்றினார். திருநகர் தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம் சார்பில் மாவட்ட தலைவர் மணிக் கலையரசன் தலைமையில் செயலாளர் சீனிவாசன் கொடி ஏற்றினார். திருநகர் மக்கள் மன்றம் சார்பில் உதவி தலைவர் பொன் மனோகரன் தலைமையில் திருநகர் திருமுறை மன்ற தலைவர் போஸ் கொடி ஏற்றினார். தலைவர் செல்லா, பொருளாளர் மாணிக்கராஜ், அனைத்து வியாபாரிகள் நலச்சங்க கனகராஜ், திருநகர் ஜெயின்ஸ் குரூப் வட்டார தலைவர் ராமலிங்கம், கவுன்சிலர் சுவேதா பேசினார். விளாச்சேரி பரிதிமாற் கலைஞர் திடலில் காங்., சார்பில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றினார்.
திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கருப்பசாமி தலைமையில் மூத்த உதவியாளர் முரளிதரன் கொடி ஏற்றினார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா முன்னிலையில் கணிதவியல் துறை தலைவர் ஹமாரி சவுதி கொடி ஏற்றினார். சவுராஷ்டிரா கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமையில் முதல்வர் சீனிவாசன் முன்னிலையில் டாக்டர் கணேஷ் பாபு கொடி ஏற்றினார். சவுராஷ்ட்ரா மகளிர் கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமையில் டாக்டர் இந்துமதி கொடி ஏற்றினார். திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் தாளாளர் நோவா தலைமையில் டாக்டர் பிரேம்வேல் கொடி ஏற்றினார். பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மேலுார்
மாவட்ட உரிமையியல், சார்பு, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் முத்துகிருஷ்ண முரளிதாஸ், சாமுண்டீஸ்வரி பிரபா, பாபு கொடியேற்றினர். வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேந்தர் பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை, டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி. வேல்முருகன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, நகராட்சியில் தலைவர் முகமது யாசின், ஜாஸ், மில்டன், ஆர்.வி., பள்ளிகளில் தாளாளர்கள் ஷ்யாம், ரவிசந்திரன், விஜயலட்சுமி கொடியேற்றினர்.
வணிகர் முன்னேற்ற சங்கம், ஹிந்து வர்த்தக சங்கத்தில் தலைவர் முத்துகிருஷ்ணன், நகை, அடகு கடை சங்கத்தில் தலைவர் சுரேஷ் கொடியேற்றினர். கொடுக்கம்பட்டி தியாகி தனுஷ்கோடி, கண்மாய்பட்டி கட்டசாமி உள்ளிட்ட 37 தியாகிகளுக்கு அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆர்.ஐ., தியாகிகளின் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி இனிப்பு கொடுத்து கவுரவித்தனர்.
திருமங்கலம்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சாந்தி கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர்கள் குமார், ஆதிகேசவன் கந்தசாமி பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மனேஷ்குமார் கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா, ரஞ்சித் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி மணிகண்டன் கொடியேற்றினார். சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், நீதிபதிகள் தினேஷ் குமார், சண்முகராஜ், வக்கீல் சங்க தலைவர் ராமசாமி செயலாளர் அறிவொளி கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ரம்யா கொடியேற்றினார். துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், ரம்ஜான் பேகம் பங்கேற்றனர்.
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் ஜெயக்குமார், பரமசிவம், முருகேசன், பால்பாண்டி பங்கேற்றனர்.தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பேச்சிமுத்து கொடியேற்றினார். ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., சங்கர், கூட கோவிலில் எஸ்.ஐ., கார்த்திகா கொடியேற்றினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் லதா கொடி ஏற்றினார். துணைத் தலைவர் வளர்மதி, பி.டி.ஓ.,க்கள் பாண்டியன், சந்திரகலா, கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, பரமன், தீபா கலந்து கொண்டனர். பி.கே.என்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிகழ்ச்சியில் செயலாளர் மோகன் கொடியேற்றினார். தலைவர் தினேஷ், பொருளாளர் மணிசங்கர், முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர். அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் அப்துல் காதிர் கொடியேற்றினார். பேராசிரியர்கள் அன்புச்செல்வி, விக்னேஸ்வர சிமாட்டி, அகில் ராஜ் பங்கேற்றனர்.
பேரையூர்
நீதிமன்றத்தில் நடுவர் வேலுச்சாமி தேசிய கொடி ஏற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பாண்டி கொடியேற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி., இலக்கியா கொடி ஏற்றினார். பேரூராட்சியில் தலைவர் குருசாமி கொடியேற்றினார். அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தழகு கொடியேற்றினார் எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஜெகதீசன் கொடியேற்றினார். பராசக்தி கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் சிவக்குமார், துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை நித்தியா , நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி கொடியேற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் ஜெகதீசன் பரிசு வழங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டியன் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். கவுன்சிலர்கள் ஜெயகாந்தன் பங்கேற்றனர். டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கூடம்மாள் கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரமசிவம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஸ்வ பாரதி நர்சரி பள்ளியில் கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன் கலைதாசன் கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் குபேந்திரன் பரிசு, இனிப்பு வழங்கினார்.
சோழவந்தான் தொகுதி அலுவலகத்தில் எம்.எல்.ஏ., வெங்கடேசன் கொடி ஏற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பரந்தாமன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிராகாஷ், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர். சோழவந்தான் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் கொடியேற்றினார். துணைத் தலைவர் லதா முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் சூரியகுமார் வரவேற்றார்.
சோழவந்தான் எம்.வி.எம்., மெட்ரிக் பள்ளியில் தாளாளர் மருதுபாண்டியன் கொடியேற்றினார். பள்ளி குழுமத் தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், முதல்வர் செல்வம் பங்கேற்றனர். திருவேடகம் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாதவன் தலைமையில்,. பள்ளிச் செயலர் சுவாமி பரமானந்த மகராஜ் கொடியை ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியர் அச்சுதலிங்கம் வரவேற்றார். காமராஜர் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பென்சாம் தலைமையில், தலைவர் சிவபாலன் முன்னிலையில், மாணவி சசிகலா கொடியேற்றினார். முதல்வர் கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
பாலமேடு பேரூராட்சியில் தலைவர் சுமதி பாண்டியராஜன் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராம்ராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சசிகலா வரவேற்றார். அலங்காநல்லுார் பேரூராட்சியில் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கொடியேற்றினார். துணைத் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
உசிலம்பட்டி
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். கிளைச் சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மீர்ஷ்உசேன் கொடி ஏற்றினார். நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாராஜன், அரசு வக்கீல் ராஜசேகரன் முன்னிலையில் சார்பு நீதிமன்ற நீதிபதி ரஸ்கின்ராஜ் கொடி ஏற்றினார். அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் உதவிப் பொறியாளர்கள் கார்த்திக், மணிகண்டன் முன்னிலையில் கிளை மேலாளர் பாண்டியராஜன் கொடி ஏற்றினார். நகராட்சியில் தலைவர் சகுந்தலா கொடி ஏற்றினார். நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு கொடி ஏற்றினார். கருமாத்துார் கிளாரட் பள்ளியில் பாதிரியார் செல்வமணி, உதவித்தலைமை ஆசிரியர் அருள்ஜோசப் முன்னிலையில் தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் கொடி ஏற்றினார். உத்தப்பநாயக்கனுார் ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அருள்மாணிக்கம், உதவித்தலைமை ஆசிரியர் சிவபிரபு முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரோஸ்சுமதி கொடி ஏற்றினார். ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராஜ்குமார் முன்னிலையில் நிர்வாகி ஜெயந்த் கொடி ஏற்றினார். உசிலம்பட்டி ஜெயசீலன் பள்ளியில் முதல்வர் ஜனனி கொடி ஏற்றினார்.
எழுமலை பேரூராட்சியில் தலைவர் ஜெயராமன் கொடி ஏற்றினார். பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆறுமுகசுந்தரி, முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். தர்மவித்யாபவன் பள்ளியில் முதல்வர் மேகலா முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். சின்னக்கட்டளை பாரதியார் நர்சரி பிரைமரி பள்ளியில் முதல்வர் ஆனந்தராஜா முன்னிலையில் நிர்வாகி பொன்திருமலைராஜன் கொடி ஏற்றினார். எழுமலை ஹரிசன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையில் நிர்வாகி வரதராஜன் கொடி ஏற்றினார்.
எழுமலை மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரியில் நிர்வாகி பெருமாள், முதல்வர் கருப்பசாமி முன்னிலையில் நிர்வாகி ராமகிருஷ்ணன் கொடி ஏற்றினார். கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் செல்வகுமாரி, நிர்வாக அலுவலர் சந்திரன் முன்னிலையில் நிர்வாகி லோகநாதன் கொடி ஏற்றினார். பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சுபாராஜன், நிர்வாகி ராமராஜ் முன்னிலையில் நிர்வாகி செல்வராஜ் கொடி ஏற்றினார். மெட்ரிக்பள்ளியில் முதல்வர் தனபாக்கியம், நிர்வாகி சென்ன கிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகி சுப்பிரமணி கொடி ஏற்றினார். விச்வ வித்யாலயா பள்ளியில் முதல்வர் அருண்குமார், நிர்வாகிகள் முன்னிலையில் தாளாளர் அரிமா பாண்டியன் கொடி ஏற்றினார். விவேகானந்தா நடுநிலைப்பள்ளியில் பள்ளி நிறுவனர் சிவானந்தர், தலைவர் பெருமாள், வரதராஜ், தலைமை ஆசிரியர் பாண்டிச்செல்வி முன்னிலையில் முருகன் கொடி ஏற்றினார்.