ADDED : ஜூலை 04, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகாவில் நெல் சாகுபடி பணிகள் சுறுசுறுப்பாக துவங்கி உள்ளன. இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது.
இதில் முதல் போகத்திற்கு நேற்று(ஜூலை 3) அணை திறக்கப்பட்டது. விவசாயிகள் டிராக்டர் மூலம் வயலை உழுதும், பாரம்பரிய முறையில் மாடுகளை வைத்து சமன் செய்தும் நெல் நடவு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கிணறு வசதி உள்ள விவசாயிகள் நாற்றங்கால் அமைத்தும், சிலர் நடவு பணிகளையும் முடித்துள்ளனர். விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் உழவு மாடு டிராக்டர் வைத்திருப்பவர்கள், மண்வெட்டி வேலை என விவசாய தொழிலாளர்கள் 'பிஸி'யாக உள்ளனர்.