ADDED : ஆக 08, 2026 07:21 PM
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் பி.காம்., ஹானர்ஸ் துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான சந்திப்பு கூட்டம் நடந்தது. ஏ.சி.சி.ஏ., அச்சீவர்ஸ் கிளப் துணைத் தலைவர் பவிஷ்யா வரவேற்றார். துணை முதல்வர் பிந்து ஆண்டனி முன்னிலை வகித்தார்.
‘எல்லையற்ற நிதித்துறை தொழில் வாய்ப்புகள் – உலகளாவிய வாய்ப்புகளை திறப்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பிரைட்ஸ்பான் அட்வைசர்ஸின் தலைமை செயல் அதிகாரி ரங்கராஜன் சுப்ரமணியன், சர்வதேச திறன் மேம்பாட்டுக் கழக மண்டலத் தலைவர் அரவிந்த் பேசினர். பேச்சு, வினாடி வினா, குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளிக் குழு ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையையும், அனுப்பானடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியினர் 2ம் இடத்தையும் வென்றனர். ஏற்பாடுகளை துறைத் தலைவர் மீனா செய்திருந்தார். 13 பள்ளிகளில் இருந்து 225 மாணவர்கள், 22 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
