UPDATED : ஆக 08, 2026 08:59 PM
ADDED : ஆக 08, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை ராஜாக்கூர் எம்.பி.எப்., பள்ளியில் சேர்மன் அருணாச்சலம் தலைமையில் விதைத் திருவிழா நடந்தது.
முதல்வர் உதய பிரபா வரவேற்றார். உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காந்தி, விதை கண்காட்சியை திறந்து வைத்து போக்சோ சட்டம், போதைப் பொருள் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன், பள்ளி முதன்மை செயல் அதிகாரி செந்தில் ராஜா, இயக்குனர் சுமதி உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
