ADDED : ஏப் 11, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வெள்ளரிப்பட்டி கல்லாணை, தீபா மகன் யோக சஞ்சய் 23, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு மாணவர்.
டெல்லியில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்டு 10, 5 கி.மீ.. தனிநபர் ஒட்டம், தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய 3 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கு தேர்ச்சி பெற்றார். யோகசஞ்சயை கிராம மக்கள், ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை மற்றும் ஊராட்சி தலைவர் பிரஸ்நேவ் பாராட்டினர்.

