/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திரும்பும் வசதியுள்ள இறகு கலப்பை அறிமுகம்
/
திரும்பும் வசதியுள்ள இறகு கலப்பை அறிமுகம்
ADDED : செப் 08, 2024 04:44 AM

மதுரை: உழவு நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வேளாண் பொறியியல் துறையில் திரும்பும் வசதியுள்ள இறகு கலப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கருவியின் பயன்பாடு குறித்து செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சரவணபெருமாள் கூறியதாவது:
சாதாரண கலப்பையை டிராக்டரில் பொருத்தி நிலத்தை உழும் போது வட்டவடிவில் சுற்றி சுற்றி தான் உழ முடியும். அதற்கு கூடுதல் நேரமாகும். திரும்பும் வசதியுள்ள இறகு கலப்பையில் மேலும் கீழுமாக இறகு வடிவில் வார்ப்பு இரும்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
நிலத்தை நேராக உழுது முடித்தபின் அடுத்த வரிசைக்கு இறகு கலப்பை கருவி தானாக திரும்பிவிடும் என்பதால் வரிசை முறையில் உழலாம். மண்ணை அதிக ஆழத்தில்கருவி புரட்டுவதால் கோடை உழவின் போது மழை பெய்தால் அதிகளவுநீர் நிலத்தில் தங்கும். இதனால் நீரை சேமிக்கும்கூடுதல் வழியாகவும் உள்ளது.
ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கரை உழுதுவிட முடியும். வேளாண் பொறியியல் துறையில் மணிக்கு ரூ.500 கட்டணத்தில் இக்கருவி வாடகைக்கு விடப்படுகிறது. 40 குதிரைத்திறனுக்கு மேல் உள்ள டிராக்டரில் இணைத்து பயன்படுத்தலாம் என்றனர்.
முன்பதிவுக்கு: 94436 77046.