/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம்

ADDED : ஆக 23, 2024 04:39 AM
மதுரை: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தென் தமிழகத்திலேயே முதல் முறையாக லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியை அறிமுகப்படுத்தியது.
டாக்டர் செல்வமணி தலைமையில் இதயவியல் துறைத் தலைவர் கணேசன் நம்பிராஜன், முதுநிலை இன்டர்வென்ஷனல் சிகிச்சையியல் நிபுணர் சிவக்குமார், சம்பத், ஜெயபாண்டியன் ஆகியோர் கூறியதாவது:
மாரடைப்பு ஏற்பட்டு மார்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து 6 மணி நேரங்களுக்குள்ளும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியம். நேரம் செல்லச் செல்ல ரத்த உறைக்கட்டியின் சுமையும், பாதிப்பும் அதிகமாகிவிடும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ரத்தக்குழாயில் புதிய அடைப்பு உருவாகியிருந்தது. கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு இப்படி நிகழக்கூடும். ஏற்கனவே ஸ்டென்ட் பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மீண்டும் செய்வது திரும்ப பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியை பயன்படுத்தினோம்.
இம்முறையில் ரத்தக் கட்டிகளை ஆவியாக்கி அகற்றி, நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றனர். டாக்டர்கள் ஜெயபாண்டியன், தாமஸ் சேவியர் பால் சிங், திலீப் பெர்னார்ட் அருள்பிரகாசம் உடனிருந்தனர்.