ADDED : மே 10, 2024 05:16 AM
மதுரை: மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் நிதிநிறுவனம், அதன் துணை நிறுவனங்களான கார்லண்டோ பிராப்பர்ட்டீஸ், டிரான்ஸ்கோ பிராப்பர்ட்டீஸ், குளோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ், ஆகிய நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், விசாரணை அதிகாரியிடம் தக்க ஆதாரங்களுடன் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ், அதன் துணை நிறுவனங்கள் மீது காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டோர், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், கதவு எண் 4/425ஏ, சங்கரபாண்டியன் நகர், பார்க் டவுன், தபால்தந்தி நகர் விரிவாக்கம், மதுரை--17 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்.