/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருப்பது தவறு இல்லையா: யுடியூபர் வாசன் கேள்வி
/
வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருப்பது தவறு இல்லையா: யுடியூபர் வாசன் கேள்வி
வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருப்பது தவறு இல்லையா: யுடியூபர் வாசன் கேள்வி
வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருப்பது தவறு இல்லையா: யுடியூபர் வாசன் கேள்வி
ADDED : மே 31, 2024 05:39 AM

மதுரை : வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருப்பது தவறு இல்லையா. என்னை பார்த்து யாரும் கெட்டுப்போக மாட்டார்கள் என மதுரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றபோது யுடியூபர் டி.டி.எப்., வாசன் சப்தமாக கூறினார்.
சென்னையை சேர்ந்த இவர் மே 15 இரவு 7:50 மணிக்கு மதுரை பாண்டிகோயில் மஸ்தான்பட்டி டோல்கேட் பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது காரில் பயணித்தவாறே அலைபேசியில் ரீல்ஸ் எடுத்து யுடியூப் சேனல் ஒன்றில் வெளியிட்டார்.
இதையடுத்து ஆயுதப்படை எஸ்.ஐ., மணிபாரதி புகாரில் கவனக்குறைவுடன் கார் ஓட்டியது, மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டது உள்ளிட்ட 7 பிரிவுகளில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிந்து வாசனை கைது செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, மதுரை மாவட்ட 6வது ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அப்போது வாசனின் வழக்கறிஞர்கள் தரப்பில் 'ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. வாசன் வெளியிட்ட வீடியோவை வைத்து தான் 5 மணிநேரம் கடக்க இருந்த தொலைவை இரண்டரை மணிநேரத்தில் கடந்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்' என தெரிவித்தனர்.
போலீஸ் தரப்பில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக இவர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுகிறார். இவரை இளைஞர்கள் பலர் பின்பற்றுவர் என்ற அடிப்படையில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'எதிர்காலத்தில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்குள் செல்லும்போது வாசன் கூறுகையில் கார் ஓட்டும்போது லவ்டு ஸ்பீக்கரில் தான் பேசினேன். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என்னை பார்த்து யாரும் கெட்டுப்போக மாட்டார்கள். வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கக் கூடிய நிலையில் அதெல்லாம் தவறு இல்லையா.
எத்தனை பேர் ரோட்டில் டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் செல்கின்றனர் தெரியுமா. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்' என சப்தமாக கேள்வி எழுப்பி சென்றார்.