ADDED : ஜூன் 14, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் 'பகவத்கீதை கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள்' பயிற்சி வகுப்பு ஜூன் 16ல் துவங்கவுள்ளது.
ஞாயிறுதோறும் ஆறு வாரங்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை வகுப்பு நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்கலாம். குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு தனி வகுப்பு உண்டு. வினா விடை பகுதி, மனதை மகிழ்விக்கும் பிரார்த்தனை, கவலை போக்கும் ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாதங்கள் வழங்கப்படும். பங்கேற்க கோயிலில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு 72001 10052 வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம்.