/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் 400 நிலுவை சான்றிதழ் பதிவேற்றம் சிறப்பு முகாம் நடத்த முடிவு
/
மாநகராட்சியில் 400 நிலுவை சான்றிதழ் பதிவேற்றம் சிறப்பு முகாம் நடத்த முடிவு
மாநகராட்சியில் 400 நிலுவை சான்றிதழ் பதிவேற்றம் சிறப்பு முகாம் நடத்த முடிவு
மாநகராட்சியில் 400 நிலுவை சான்றிதழ் பதிவேற்றம் சிறப்பு முகாம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 23, 2024 05:36 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு, திருத்தம் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவில் கமிஷனர் தினேஷ்குமார் மேற்கொண்ட நடவடிக்கையால் நிலுவையில் இருந்த 400 சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் துவங்கின.
மாநகராட்சி சுகாதார பிரிவில் செயல்படும் இச்சான்றிதழ் பிரிவில் போதிய எண்ணிக்கையில் ஊழியர் இல்லாதது, தொழில் நுட்பம் தெரிந்த அலுவலர் இல்லாதது போன்ற காரணங்களால் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது.
இதனால் மக்கள் பல நாட்கள் மாநகராட்சிக்கு அலைந்தனர். கமிஷனர் தினேஷ்குமாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து நகர்நல அலுவலகம், புள்ளியியல், ஆவணங்கள் வைப்பறை பிரிவுகளின் அலுவலர்களுக்கான அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விளக்கம் கேட்டார்.
இதையடுத்து சான்றிதழ் வழங்கும் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு, உதவி நகர்நல அலுவலர் அபிேஷக்கிற்கு வழங்கப்பட்டது.
அவர் கூறியதாவது: முதல் நடவடிக்கையாக தொழில்நுட்பம் தெரிந்த ஊழியர்கள் இங்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2017க்கு முன் மேற்கொள்ள வேண்டிய பிறப்பு, இறப்பு, பெயர் திருத்தம் தொடர்பான 400 சான்றிதழ்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தன. விடுமுறை நாட்களிலும் ஊழியர் வரவழைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையடுத்து உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்த 400 சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
தவிர நேரடி விசாரணை நடத்தி சான்றிதழ் அளிக்க வேண்டியவை மட்டும் பரிசீலனையில் உள்ளன. அவையும் விரைவில் வழங்கப்படும். சான்றிதழ் வழங்க மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.