ADDED : ஜூன் 19, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 10 நாள் குந்தன் நகை -ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் ஜூலை 2ல் துவங்குகிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 - 45 வயதுள்ள இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம்.
அரசு சான்றிதழ்களுடன் உணவு, பயிற்சி உபகரணம், தங்குமிடம் இலவசம். விரும்புவோர் ஜூலை 1க்குள் 94456 00561, இமெயில் mdu.rudset@gmail.com, இணையதளம் www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்ய ேண்டும்.
பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் வர வேண்டும். நுாறு நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.