sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தியாகம் செய்தால் முன்னேறலாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

/

தியாகம் செய்தால் முன்னேறலாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

தியாகம் செய்தால் முன்னேறலாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

தியாகம் செய்தால் முன்னேறலாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

1


ADDED : ஜூலை 07, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை யாதவர் மகளிர் கல்லுாரியில் முன்னாள் எம்.பி., கார்வேந்தன் எழுதிய 'தமிழகத்தின் தியாகச் சுடர்கள்' நுால் வெளியீட்டு விழா நடந்தது. முன்னாள் எம்.பி., சித்தன் தலைமை வகித்தார். குமரன் பதிப்பகம் வயிரவன் வரவேற்றார். தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம தலைவர் ரகுபதி நுால் ஆய்வு மேற்கொண்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட முதல் பிரதியை கல்லுாரித் தலைவர் அருண் போத்திராசு பெற்றுக் கொண்டார். கார்வேந்தன் பேசுகையில், ''1857 மீரட் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரப் போர் என்று மத்திய அரசு 1957ல் நுாற்றாண்டு விழா நடத்தி நாணயம் வெளியிட்டது. அதற்கு முன் போராடிய தமிழகத்தின் அழகுமுத்துகோன், வேலுநாச்சியார், கட்டபொம்மன், தீரன் சின்னமலை பற்றிய குறிப்புகள் வரலாறுகளில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர விழா கொண்டாட்டத்தை 'அமிர்த பெருவிழா' என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அறியப்படாத தியாகிகளை நினைவுகூர வேண்டும் என்றார். நான் 45 பேர் பற்றி பேசினேன். பிரதமர் கேட்டுக்கொண்டதால் அதை நுாலாக எழுதியுள்ளேன்'' என்றார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசுகையில், ''நம் வாழ்க்கையில் கவனச் சிதறலுக்கு வழிவகுக்கும் விஷயங்களை தியாகம் செய்தாலே போதும். குடி உள்ளிட்ட கெட்ட விஷயங்களை தியாகம் செய்தால் நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும். தியாகிகளின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்'' என்றார்.

பேராசிரியர் சுமதி நன்றி கூறினார். கல்லுாரி செயலாளர் இந்திராணி, ஆடிட்டர் கலாவதி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் திவ்யா, தேனி தியாகராஜன் கல்லுாரி குழும தலைவர் தியாகராஜன், டாக்டர் சீதாபதி, ராம்மோகன், எழுத்தாளர் தர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us