/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கச்சத்தீவு விவகாரம் தேர்தல் 'ஸ்டண்ட்': செல்லுார் ராஜூ சொல்கிறார்
/
கச்சத்தீவு விவகாரம் தேர்தல் 'ஸ்டண்ட்': செல்லுார் ராஜூ சொல்கிறார்
கச்சத்தீவு விவகாரம் தேர்தல் 'ஸ்டண்ட்': செல்லுார் ராஜூ சொல்கிறார்
கச்சத்தீவு விவகாரம் தேர்தல் 'ஸ்டண்ட்': செல்லுார் ராஜூ சொல்கிறார்
ADDED : ஏப் 02, 2024 06:48 AM
மதுரை : ''பத்தாண்டுகளில் கச்சத்தீவை மீட்க பா.ஜ., என்ன நடவடிக்கை எடுத்தது. இது தேர்தல் 'ஸ்டண்ட்'. மீனவர்களின் ஓட்டுக்காக கச்சத்தீவு விஷயத்தை பா.ஜ., கையில் எடுத்துள்ளது'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரம் ஒரு தேர்தல் ஸ்டண்ட். கச்சத்தீவை தாரைவார்த்த போது அன்றைய முதல்வர் கருணாநிதி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. 2006 செப்., 24ல் கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா கடிதம் எழுதினார். 2008 ஆக., 24ல் உச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தி.மு.க.,வால் அவ்வழக்கை எடுத்து நடத்தக் கூட முடியவில்லை.
அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இப்போதுதான் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல் கூறுகிறார். கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ். அதனுடன் இன்றும்கூட்டணியில் உள்ளது தி.மு.க., பத்தாண்டுகளில் கச்சத்தீவை மீட்க பா.ஜ., என்ன நடவடிக்கை எடுத்தது. தேர்தலில் மீனவர்களின் ஓட்டுக்காக கச்சத்தீவு விஷயத்தை கையில் எடுத்துள்ளனர் என்றார்.