/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்
/
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் அ.தி.மு.க., நாளை உண்ணாவிரதம்
ADDED : ஆக 23, 2024 04:31 AM
திருமங்கலம்: கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும் அ.தி.மு.க., மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் சார்பில் செக்கானுாரணியில் நாளை(ஆக.,24) உண்ணாவிரதம் நடக்கிறது.
இதற்கான இடத்தை நேற்று பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பா.பி., கதிரவன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீனிவாசன் கூறுகையில், ''தி.மு.க., அரசால் கள்ளர் சீரமைப்பு விடுதிகளையும் பள்ளிகளையும் பராமரிக்க இயலவில்லை என 2022ல் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சி செய்தனர். அப்போது அதற்கு கள்ளர் சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது மீண்டும் தி.மு.க., அரசு இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளது. இதை கண்டித்துதான் உண்ணாவிரதம் நடக்கிறது'' என்றார்.