
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளி சார்பில் தென் மாவட்டங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி விருதுநகரில் நடந்தது. மதுரை செயின்ட் மேரி ஆப் லுாக்கா பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.
10 - 11 வயது பிரிவில் அருஞ்சுனை சபரி தங்கப்பதக்கம், 12 - 13 வயது பிரிவில் குரு பிரசாத் வெள்ளிப்பதக்கம், நிதிஷ் குமார், யோகபிரசன்னா வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ் குமார் தலைமை நடுவராகவும் நடுவர்களாக கார்த்திக், கார்த்திகேயன், அங்குவேல், பாலகாமராஜன், முத்துராஜா, அஜித்குமார், தணிகை வேல்முருகன், மணிகண்டன் செயல்பட்டனர். ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் செய்திருந்தார்.