ADDED : மே 20, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி கணேசா கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாணவர்களுக்கான கருப்பு பட்டை தேர்வு நடந்தது.
கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவைத் தலைவர் பொன் கலைதாசன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கச் செயலாளர் மனோராஜா, இளவரசன் முன்னிலை வகித்தனர். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக சந்துரு, ஷாலினி, தன்யா, டேனியல் ராஜ், மோனிஷ், சந்தோசினி செயல்பட்டனர். பயிற்சியாளர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.

