ADDED : ஆக 08, 2024 04:54 AM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருப்பாயூரணி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கோ கோ போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி போட்டிகளை நடத்தியது.
14 வயது ஆடவர் பிரிவில் ஆண்டார்கொட்டாரம் அரசுப் பள்ளி முதலிடம், இளமனுார் ஆதி திராவிடர் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஆண்டார் கொட்டாரம் அரசுப் பள்ளி முதலிடம், அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் ஏ.கே.என்.யு.சுந்தர் மெட்ரிக் பள்ளி முதலிடம், அருள்மலர் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
14 வயது மகளிர் கோகோ போட்டியில் ஆண்டார் கொட்டாரம் அரசுப் பள்ளி முதலிடம், இளமனுார் ஆதி திராவிடர் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஆண்டார்கொட்டாரம் அரசுப் பள்ளி முதலிடம், அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் இளமனுார் பள்ளி முதலிடம், பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.